எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 மார்ச், 2024

25.ஸ்வீட் கார்ன் மிக்ஸ்

25.ஸ்வீட் கார்ன்  மிக்ஸ்


 

தேவையானவை:- வேகவைத்த ஸ்வீட் கார்ன் – 2 கப், வெங்காயம் பொடியாக அரிந்தது – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி பொடியாக அரிந்தது – 1 டேபிள்ஸ்பூன், கேரட் பொடியாக அரிந்தது - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கருப்பட்டிப் பாகு – 2 டீஸ்பூன், பேரீச்சை ஜாம் – 2 டீஸ்பூன். தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன் பொடியாக அரிந்த கொத்துமல்லித்தழை – சிறிது. உப்பு – கால் டீஸ்பூன்.  

 

செய்முறை :- இவை அனைத்தையும் கலந்து பரிமாறவும். தேவைப்பட்டால் ஓமப்பொடி, பொரி சேர்த்துக் கொள்ளலாம்.

திங்கள், 25 மார்ச், 2024

24.நெல்லிக்காய் ஸ்வீட் தொக்கு

24.நெல்லிக்காய் ஸ்வீட் தொக்கு


 

தேவையானவை:- முழு நெல்லிக்காய் – 30, வெல்லம் – 2 அச்சு, தேன் – கால் கப், உப்பு – 1 சிட்டிகை.

 

செய்முறை:- நெல்லிக்காய்களை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொட்டை நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து மசித்து வைக்கவும். இதில் துருவிய வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். நன்கு இறுகி வரும்போது இறக்கி நன்கு ஆறவிட்டுத் தேன் சேர்க்கவும்.

வெள்ளி, 22 மார்ச், 2024

23.இனிப்பு உருளை ஃபிங்கர் சிப்ஸ்

23.இனிப்பு உருளை ஃபிங்கர் சிப்ஸ்


 

தேவையானவை:- இனிப்பு உருளை – கால் கிலோ, ஜீனி – 1 கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, கிஸ்மிஸ் – தலா 2. நெய் – 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- இனிப்பு உருளையைத் தோல் சீவி குச்சிகளாகச் சீய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். முந்திரி கிஸ்மிசை நெய்யில் பொன்னிறமாக வறுத்து பொரித்த உருளையில் சேர்க்கவும். ஜீனியை முத்துப் பாகு வைத்து அதில் உருளைச் சிப்ஸைப் போட்டு நன்கு புரட்டி வைக்கவும். ஜீனிக்குப் பதில் வெல்லமும் பயன்படுத்தலாம்.

வியாழன், 21 மார்ச், 2024

21.சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்

21.சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்


 

தேவையானவை:- சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம், பச்சரிசி பாசிப்பருப்பு – தலா இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், வெல்லம் – 1 அச்சு, நெய் – 2 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ் – தலா 8.

 

செய்முறை:- சர்க்கரை வள்ளிக்கிழங்கை அவித்துத் தோலுரித்து மசித்து வைக்கவும். பச்சரிசி பாசிப்பருப்பை லேசாக வெதுப்பித் தூளாக அரைத்து இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வேக விடவும். நன்கு வெந்ததும் மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெல்லத்தூளைச் சேர்த்துக் கொதிக்க விடவும். தேங்காயை அரைத்து ஊற்றி இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பொரித்து ஏலப்பொடியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

செவ்வாய், 19 மார்ச், 2024

20.பலாக்கொட்டை சுகியன்

20.பலாக்கொட்டை சுகியன்


 

தேவையானவை :- பலாவிதை – 30, தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் – 2 அச்சு, புதிதாக அரைத்த இட்லிமாவு – 1 கப், ஏலப்பொடி- 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- பலாவிதைகளைத் தோலுரித்து ப்ரவுன் தோலையும் சீவி நன்கு கழுவி வேகவைத்து நீரை வடிக்கவும். இதை மிக்ஸியில் அரைத்து இத்துடன் தேங்காய்த்துருவல், வெல்லம்சேர்த்துக் கிளறி ஏலப்பொடி போட்டு வைக்கவும். இதில் எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து கெட்டியான இட்லி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...